தாயுடன் வந்த 9 வயது சிறுமியை சரமாரியாக தாக்கிய வாலிபர்…. காப்பாற்ற வந்த NYPD அதிகாரியின் விரலை கடித்து…. அதிர்ச்சி சம்பவம்…!!!
SeithiSolai Tamil May 24, 2025 09:48 PM

அமெரிக்காவின் நியூயார்க் நகரம், குயின்ஸ் மாவட்டத்தில் உள்ள கிளெண்டேல் பகுதியில் மே 10 ஆம் தேதி நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஃபெலிஸ் என்ரிக் (31) என்ற நபர், தனது தாயுடன் நிற்கும் 9 வயது சிறுமியிடம் சென்று, பெயரை கேட்டவுடன் முகத்தில் கடுமையாக அடித்து கீழே தள்ளினார். தாக்குதலால் சிறுமியின் உதடு வெட்டியதுடன், பற்கள் சிதறி, கையில் காயமடைந்தார்.

சம்பவத்தை பார்த்த NYPD சார்ஜன்ட் செபாஸ்டியன் ஹஜ்டர் தலையிட்ட போது, குற்றவாளி அவரைத் தாக்கியதோடு, அவரது விரல் நுனியையும் கடித்துத் தின்றார். மருத்துவர்கள் அந்த விரல் பகுதியை மீண்டும் இணைக்க முடியவில்லை என தெரிவித்தனர். ஃபெலிஸ் என்ரிக் ஏற்கனவே ஒரு கொலை முயற்சி வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்மீது குழந்தையை ஆபத்தில் ஆழ்த்தல், தாக்குதல், தொந்தரவு உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மனநல பரிசோதனையில் வைத்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.