Mr. பீஸ்ட் என்று அழைக்கப்படும் அமெரிக்க யூடியூப்பர் ஜிம்மி டொனால்ட்சன். இவர் தனது இளம் வயதிலேயே யூடியூப் வாழ்க்கையை தொடங்கி உள்ளார். இவரது முதல் வெற்றி கடந்த 2017 ஆம் ஆண்டு “ஐ கவுண்ட் டு 100000″என்ற வீடியோ மூலம் பிரபலமானார். அந்த வீடியோ 31 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்தது.
அதன் பின்னர் கடந்த 2024 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் சிறந்த படைப்பாளர் பட்டியலில் மிஸ்டர் பீஸ்ட் ஒரு முன்னணி படைப்பாளராக அடையாளப்படுத்தப்பட்டார். இவர் தற்போது இளம் வயதிலேயே உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்து சாதனைப்படுத்துள்ளார்.
இவரது சொத்து மதிப்பு தற்போது 1 பில்லியன் டாலர்கள். அதாவது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூபாய ₹8,300 கோடியை தாண்டி உள்ளது என கூறப்படுகிறது. இதில் மிகவும் முக்கியமானது இவருக்கு பரம்பரை சொத்து என்று எதுவும் இல்லை. அவர் தனது 27 வயதிலேயே ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சொந்தமாக சம்பாதித்துள்ளார்.
மிஸ்டர் பீஸ்ட் யூட்யூப் மட்டுமல்லாமல் “பீஸ்ட் பர்கர்” என்ற துரித உணவு கடை, “பீஸ்ட் பிளஸ்” என்ற சாக்லேட் நிறுவனம் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். கடந்தாண்டில் யூட்யூபில் அதிக பின் தொடர்புகளை கொண்ட நபர் என்ற சாதனையும் மிஸ்டர் பீஸ்ட் படைத்துள்ளார்.
மேலும் “பீஸ்ட் ப்லாந்த்ரோபி”என்ற தொண்ட நிறுவனம் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறார். இதுகுறித்து மிஸ்டர் பீஸ்ட் கூறியதாவது,” இறப்பதற்கு முன் தன்னிடம் உள்ள ஒவ்வொரு பைசாவையும் நன்கொடையாக வழங்குவேன்.” என அறிவித்துள்ளார் தனது வாழ்வின் நோக்கமே நிறைய பணம் சம்பாதிப்பதும், அவற்றை நல்ல செயல்களுக்கு செலவிடுவதும்தான் என அவர் பல இடங்களில் தெரிவித்துள்ளார்.