டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தினார்.
இதன் பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை 5 நிமிடங்கள் தனியே சந்தித்து உரையாடினார்.
இந்த தருணத்தில் தமிழ்நாடு சார்பில் சில கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்ததாக மு.க.ஸ்டாலின் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.
தொடர்ந்து பிரதமரை சந்திக்க வெள்ளைக் கொடியுடன் வந்துள்ளதாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "என்னிடம் வெள்ளைக்கொடியும் இல்லை, அவரிடம் இருப்பது போல காவிக்கொடியும் இல்லை" என்று கூறினார்.
எப்போது டெல்லி வந்தாலும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திப்பது வழக்கம் என்றும், நட்பு ரீதியில் சந்தித்ததாகவும், இதில் அரசியலும் பேசப்பட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு