இலங்கை திரையுலகின் ராணி, சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர்... நடிகை மாலினி காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!
Dinamaalai May 25, 2025 04:48 AM

இலங்கை திரையுலகின் ராணி, சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர், நடிகை மாலினி காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை திரையுலகில் அந்த காலத்திலேயே, “திரையுலகின் ராணி” என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை மாலினி பொன்சேகா. இலங்கையில் மட்டுமே இவர் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1978-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'பைலட் பிரேம்நாத்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மாலினி. 


பழம்பெரும் நடிகையான மாலினி பொன்சேகா வயது மூப்பு மற்றும்  உடல்நலக் குறைவு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு வயது 78. 

இவர் உடல் நலக்குறைபாடு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.