இலங்கை சினிமாவின் ராணி என திரையுலகில் கொண்டாடப்பட்டவர் நடிகை மாலினி பொன்சேகா. இவர் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1978-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'பைலட் பிரேம்நாத்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
பழம்பெரும் நடிகையான மாலினி பொன்சேகா வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 78.
இவர் உடல் நலக்குறைபாடு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.