“இந்திய டெஸ்ட் அணி”… 4 போட்டிகளில் விளையாடுவதே கஷ்டம்… இதனால்தான் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கல… அஜித் அகர்கர் விளக்கம்…!!!
SeithiSolai Tamil May 25, 2025 05:48 PM

இந்தியாவின் புதிய டெஸ்ட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலிருந்து ஓய்வு பெற்றதால் புதிய அணி குறித்து எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்த நிலையில் டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு துணை கேப்டன் ஆக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த புதிய அணியில் ஏராளமான இளம்வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இது பற்றி தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, பும்ரா ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை வழிநடத்தினார்.

ஆனால் அனைத்து போட்டிகளிலும் அவர் முழு உடல் தகுதிகளுடன் இல்லை. ஒரு வீரராக நாங்கள் அவரை முழுமையாக விரும்புகிறோம். ஆனால் அதே நேரத்தில் பும்ராவால் 5 போட்டிகளிலும் விளையாட முடியும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இதனை அணி டாக்டர்கள் தான் எங்களிடம் தெரிவித்தார்கள்.

பணிச்சுமையை அவர் எப்படி தாங்குவார் எத்தனை போட்டிகளில் விளையாடுவார் என்பதை சொல்ல முடியாது. அவர் முக்கியமாக உடல் தகுதியுடன் 3 அல்லது 4 போட்டிகளில் விளையாடினாலும் வெற்றியை தேடி தருவார் என்று கூறினார். அவர் கேப்டனாக இருப்பதை விட வீரராக இருப்பதில் தான் எங்களுக்கு மகிழ்ச்சி.

அவருக்கு கேப்டன் பொறுப்பு கொடுத்து அதிக சுமையை கொடுப்பதற்கு பதிலாக ஒரு வீரராக அவர் அணிக்கு நல்ல முறையில் பந்து வீசுவதே சிறப்பான விஷயமாகும். அவருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதற்காகவும் அவருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டும் தான் கேப்டன் பொறுப்பு வழங்கப்படவில்லை என்று கூறினார். மேலும் இது குறித்து நாங்கள் பும்ராவிடம் பேசினோம் என்றும் அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார் என்றும் கூறினார்.

 

 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.