தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் காவுராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தூத்துக்குடி பீச் ரோடு மீன்பிடி துறைமுகம் அருகில் பைக்குடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவரது பைக்கில் துணிப்பையில் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர் தூத்துக்குடி ராமர் விளையை சேர்ந்த கணேசன் மகன் பிரபு வினோத் குமார் (28) என்று தெரியவந்தது. அவரை கைது செ்யத போலீசார், அவரிடம் இருந்த 1.75 கிலோ கஞ்சா வை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.