“ஐபிஎல் போட்டியில் 200 பிளஸ்”… சரித்திர சாதனை படைத்த பஞ்சாப் அணி… இதுதான் மாஸ் ரெக்கார்டு…!!!
SeithiSolai Tamil May 26, 2025 04:48 AM

18-வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்ச ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் அடித்தார்.

டெல்லி அணியின் சார்பாக முஸ்தாபிசுர் ரகுமான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பஞ்சாப் அணியின் நடப்பு தொடரில் 200+ ரன்கள் அடிப்பது 7-வது முறையாகும். 7 முறையும் அந்த அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ரன் அடித்துள்ளனர். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் முதலில் பேட்டிங் செய்த அதிக முறை 200+ அடித்த அணி என்ற சரித்திர சாதனையை படித்துள்ளது.

அதோடு ஒரு டி20 தொடரில் அதிக முறை 200+ சாதனை பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் வார்விக்ஷயர் ஆகிய அணிகளுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து 207 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய டெல்லி அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 208 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் சமீர் ரிஸ்வி 58 ரண்களும் கருண் நாயர் 54 ரன்கள் அடித்தனர். பஞ்சாப் தரப்பில் ஹர்ப்ரீத் பிரார் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.