“நடிகர் விஜயின் அரசியல் வருகை”… என் அப்பா மட்டும் ஓகே சொன்னால் போதும்… நான் ரெடி தான்… நடிகை சுருதி ஹாசன் அதிரடி பேட்டி…!!!
SeithiSolai Tamil May 26, 2025 05:48 AM

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சுருதிஹாசன். இவர் தற்போது தன்னுடைய அப்பாவுடன் சேர்ந்து நடிக்க தயாராக இருப்பதாகவும் அவர் ஓகே சொன்னால் மட்டும் போதும் என்றும் கூறியுள்ளார்.

அதாவது தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சுருதிஹாசன்’தக் லைப்’. திரைப்படத்தில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து நேற்று சென்னைக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு அவர் முதலில் வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து கூலி படத்தில் இணைந்து பணியாற்றுவது மிகவும் புதுமையான மற்றும் மகிழ்ச்சியான அனுபவமாக மாறி உள்ளது. என்னுடைய அப்பா மட்டும் ஓகே சொன்னால் கண்டிப்பாக மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

மேலும் நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து சுருதிஹாசன் சாச்சி 420, ஹே ராம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.