சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்.. ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்கிய போட்டியாளர்..!
Tamil Minutes May 26, 2025 05:48 AM

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் புகழ் பெற்றது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்பதும், ஜூனியர், சீனியர் என தனித்தனியாக நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியின் 10வது சீசன் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது.

பிரியங்கா மற்றும் மாகாபா தொகுத்து வழங்கிய இந்த சீசனில், பிரியங்காவுக்கு திருமணம் ஆனதால் , அவருக்கு பதிலாக சில எபிசோடுகளை லட்சுமி பிரியா தொகுத்து வழங்கினார்.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்று, உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பாடகர் மனோ, பாடகி சித்ரா, இசையமைப்பாளர் டி. இமான் இருந்தனர்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 பல்வேறு சுற்றுகளை கடந்தபின் இன்று இறுதிப் போட்டி நடந்தது. இதில் 60 லட்சம் மதிப்புள்ள வீட்டைப் பெற்ற டைட்டில் வின்னராக காயத்ரி என அறிவிக்கப்பட்டார். அவருக்கு கமல் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இருவரும் இணைந்து டிராபியை வழங்கினர்.

இரண்டாம் இடம் நஸ்ரின் பெற்றார். மூன்றாவது இடம் சாரா சுருதி மற்றும் ஆத்யா ஆகிய இருவரும் பெற்றனர்.

இரண்டாம் இடம் பெற்ற நஸ்ரினுக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பெற்ற சாரா சுருதி மற்றும் ஆத்யாவுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.

வெற்றியாளர்களை கமல்ஹாசன் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்தினர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.