பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் முக்கிய எதிர் கட்சியாக உள்ளது. இந்த கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான் இவர் இன்று காலை அமிர்தசரத்தில் உள்ள சஹர்தா என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஹர்ஜிந்தர் சிங்கை மூன்று மர்ம நபர்கள் வழிமறித்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயம் அடைந்த ஹர்ஜிந்தர் சிங்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஹர்ஜிந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஹர்ஜிந்தர் சிங்கை சுட்டுக்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதே கும்பலைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹர்ஜிந்தர் சிங்கின் வீட்டை குறி வைத்து துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.