'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Top Tamil News May 29, 2025 12:48 PM

 ’டூரிஸ்ட் பேமிலி’ படம் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸானது. படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்க, சிம்ரன், யோகி பாபு மற்றும் சசிகுமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

இந்த படத்துக்கு ரிலீஸுக்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. படம் ரிலீஸாகி ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்த நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து கலக்கி வருகிறது. இந்த படம் ரிலீஸாகி 27 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னமும் கணிசமான வசூலைத் தக்கவைத்துள்ளது.
 

இதுவரை உலகளவில் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் உள்ளிட்ட பல தமிழ் திரைப்பட பிரபலங்களில் படத்தைப் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் படம் இப்போதும் சில திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில் ஜூன் 2 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.