தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 1000க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி 8 சதவீதம் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த இந்த கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என திரைப்பட துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் இந்த கேளிக்கை வரியால் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் திரைத் துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்த தமிழக அரசு திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை குறைத்துள்ளது. இதற்கான அரசாணையை வெளியிட்டு தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 8 %லிருந்து 4 % ஆக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திரைப்படத்துறையினர் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.