இந்திய சில்லறை சந்தையில் விரைவில் ஸ்காட்ச் மற்றும் விஸ்கி விலை குறைய உள்ளதாக பெர்னாட் ரிகார்ட் இந்தியா தெரிவித்துள்ளது. பிரான்சின் பிரபல ஸ்காட்ச் மற்றும் விஸ்கி தயாரிப்பு நிறுவனமான பெர்னாட் ரிகார்டின் இந்திய கிளை நிறுவனம் பி.ஆர்.ஐ. வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு, வரி 75% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
"வர்த்தக ஒப்பந்தத்தின் காரணமாக, உயர்தர ஸ்காட்ச் மற்றும் விஸ்கியின் விலை போட்டித்தன்மையுடன் இருக்கும். இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான மாநிலங்களில் சில்லறை விற்பனை விலை குறையும்" என்று தெரிவித்துள்ளது.
வரி குறைப்பின் மூலம், இறக்குமதி செய்யப்பட்ட ஸ்காட்ச் விஸ்கியை அனைவரும் வாங்கும் விலையில் கிடைக்கச் செய்ய முயற்சிக்கிறோம். அதிகமான மக்கள் விஸ்கியை வாங்கும் வகையில் போட்டித்தன்மையுடன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.