தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார். மாநில அளவில் முதலிடம் பிடித்தவர் மாணவராக இருந்தால் மோதிரமும், மாணவியாக இருந்தால் கம்மலும் வழங்கி வருகிறார். இந்நிலையில் மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா மற்றும் பரிசளிப்பு விழா பூஞ்சேரியில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் 16 மாவட்டங்கள் உட்பட 88 தொகுதிகளில் மாணவ, மாணவிகள் 600 பேர் பங்கேற்றனர். இந்நிலையில் விழாவில் பரிசு பெற்ற ஒரு மாணவியின் தாயார் விஜயிடம் குடிகார கணவரால் எனது மகளின் படிப்பு வீணாகிவிட்டது. அதையெல்லாம் தாண்டி இன்றைக்கு தனி ஆளாக போராடி என் மகளை சாதிக்க வைத்திருக்கிறேன். மது முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் அண்ணா என்று உணர்ச்சிவசப்பட்டு அழுது கொண்டே கூறினார். அவரை விஜய் தட்டிக் கொடுத்து தோற்றினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.