நடிகை ஸ்ரீலீலா திருமண கோலத்தில்... வைரலாகும் புகைப்படங்கள்!
Dinamaalai May 31, 2025 09:48 PM


தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி  தென்னிந்திய சினிமாக்களில் நடித்து வருபவர்  நடிகை ஸ்ரீலீலா. இவர் சிவகார்த்திகேயனின் பராசக்தி உட்பட  பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.  ஸ்ரீலீலா, சமூகவலைத்தள பக்கங்களிலும் எப்போதும் தன்னை ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சமீபத்தில், திருமண கோலத்தில், நலங்கு வைக்கும் புகைப்படங்களை  நடிகை ஸ்ரீலீலா இணையத்தில்  வெளியிட்டு விரைவில் என்ற கேப்ஷனுடன் ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார்.  


இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி திருமணமா? என்று கேள்வியை எழுப்பி வருகின்றனர். ஜூன் 14 ம் தேதி 24வது பிறந்தநாளை ஸ்ரீலீலா கொண்டாடவுள்ளார். 


அதனால், பிறந்தநாளில் கொடுக்கப்படும் திதி சடங்குதான் அது என்று பலரும் கூறி வருகின்றனர். இவர் பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் காதலில் இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில் ஸ்ரீலீலாவின் இந்த புகைப்படம் இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.