தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதனால், துணை முதல்-அமைச்சர் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.