அதாவது, ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1120 அதிகரித்துள்ளது. தற்போதுள்ள விலையின் படி சவரன் ரூ.72000ஐ தாண்டி உள்ளது. ஒரு சவரன் ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ரூ.9060க்கு விற்பனையாகிறது. காலையில் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.110 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஆபரணத் தங்கம் இருமுறை உயர்ந்து, சவரன் ரூ.72000ஐ கடந்துள்ளது, பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.