#BREAKING : நகை வாங்குவோர் அதிர்ச்சி..! ஒரே நாளில் தங்கம் விலை 1,120 உயர்வு..!
Newstm Tamil June 02, 2025 11:48 PM

தங்கம் விலை கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் ரூ.71,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து இருப்பது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை ₹1,120 அதிகரித்துள்ளது.

காலையில் 22 கேரட் ஆபரணத்தின் விலை சவரனுக்கு ₹240 உயர்ந்த நிலையில், மாலையில் ₹880 என மொத்தம் ₹1,120 அதிகரித்துள்ளது. இதனால், ஒரு கிராம் ₹9,060க்கும், சவரனுக்கு ₹72,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.