“பரபரப்பான மேட்ச்”… ஸ்டேடியதிற்கு அருகில் கார் பார்க்கிங்… கிரிக்கெட் வீரர் அடித்த சிக்ஸர்… நொறுங்கிய கார் கண்ணாடி… வைரலாகும் வீடியோ..!!!
SeithiSolai Tamil June 03, 2025 01:48 AM

இங்கிலாந்தின் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டி20 பிளாஸ்ட் 2025 போட்டியில், லாங்காஷையர் அணியின் மைக்கேல் ஜோன்ஸ் விளாசிய ஒரு சிக்ஸர் நேரடியாக கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மெசெடஸ் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்தது.

டர்ஹாம் அணிக்கெதிராக ஜோன்ஸ் 55 ரன்கள் விளாசியதோடு, 151 ரன்கள் இலக்கை லாங்காஷையர் வெற்றிகரமாக கடந்து, North Group-ல் முன்னணியை தக்கவைத்தது.

 

 

இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இங்கிலாந்தின் பல கிரிக்கெட் மைதானங்களில் கார் பார்க்கிங் பகுதிகள் விளையாட்டு நிலத்துக்கு மிக அருகில் உள்ளதால், இத்தகைய சேதங்கள் நேரிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஜோன்ஸ் அடித்த சிக்ஸரால் காரின் கண்ணாடி உடைந்தது.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, கிரிக்கெட் மைதானங்களுக்கு அருகில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் கூறுகின்றனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.