இன்று அமிதாப் பச்சன் - ஜெயா பச்சனின் 52வது திருமண நாள்..! இதுவரை காணாத புகைப்படங்கள்
Newstm Tamil June 03, 2025 05:48 AM

அமிதாப் பச்சனும் அவரது மனைவி ஜெயாபச்சனும் தனது 52வது திருமண ஆண்டு விழாவை (மே 3) இன்று கொண்டாடி வருகின்றனர். இந்த சமயத்தில் அவரின் யாரும் இதுவரை பார்க்காத புகைப்படங்களை பாருங்கள்.

இந்த நட்சத்திர தம்பதியர் 1973ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர். இவர்களின் பிள்ளைகள் நடிகர் அபிஷேக் பச்சன், ஸ்வேதா பச்சன் ஆவர்.

அமிதாப் திருமணத்தில் நடந்த சுவாரசிய நிகழ்வு :  

அமிதாப் தனக்கு திருமணம் ஆன நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில், “1973ஆம் ஆண்டு குடும்ப நண்பர்கள் எல்லாம் சேர்ந்து லண்டனுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டோம். இதுதொடர்பாக எங்கள் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளவில்லை. 

ஆனால் பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர்கள் சிலரின் தந்தைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஜெயா என்னுடன் புறப்பட்டு வந்தார். நாங்கள் இருவர் மட்டும் தனியாக இருந்தோம். ஆமாம். நாங்கள் இருவரும் தனியாக செல்ல வேண்டுமென்றால் திருமணம் செய்துகொண்டு செல்லலாம் என என் தந்தை கூறினார். அடுத்த நாளே மலபார் சென்று நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்துகொண்டோம். அத்துடன் அன்றிரவே நாங்கள் லண்டன் புறப்பட்டு சென்றோம்” என அமிதாப் குறிப்பிட்டுள்ளார். அமிதாப் பச்சனின் தந்தை ஹரிவன்ஷிராய் பச்சன் ஒரு எழுத்தாளர்.

2022-23 நிதியாண்டில் ஜெயா பச்சனின் தனிப்பட்ட நிகர மதிப்பு 163 கோடி ரூபாய் ஆகும். அதேபோல் அமிதாப் பச்சனின் நிகர மதிப்பு ரூ.273.74 கோடி என தெரிய வந்துள்ளது. அதே சமயம் ஜெயாவின் வங்கி இருப்பு ரூ.10.11 கோடி, அமிதாப்பின் வங்கி இருப்பு ரூ.120.45 கோடி என மொத்தம் ரூ.130 கோடிக்கும் மேல் உள்ளது.நட்சத்திர தம்பதியின் மொத்த அசையும் சொத்து மதிப்பு ரூ.849.11 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.729.77 கோடி என மொத்தமாக ரூ.1578.88 கோடி ஆகும். 

அமிதாப் பச்சனுக்கு ரூ.54.77 கோடி மதிப்புள்ள நகைகளும், 2 மெர்சிடிஸ் மற்றும் ரேஞ்ச் ரோவர் உட்பட 16 கார்கள் உள்ளன.அதேபோல் ஜெயா பச்சனுக்கு ரூ.40.97 கோடி மதிப்புள்ள நகைகளும், ரூ.9.82 லட்சம் மதிப்புள்ள காரும் உள்ளதாக கூறப்படுகிறது.ஜெயா பச்சன் 2004ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை எம்.பியாக இருக்கிறார். சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.      

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.