ரசிகர்கள் அதிர்ச்சி... சாக்லேட் போல் மேக் அப் பொருட்களை சாப்பிட்ட இன்ஸ்டா பிரபலம் காலமானார்!
Dinamaalai June 06, 2025 04:48 AM


தைவானில் வசித்து வருபவர் பிரபல பியூட்டி இன்ஃப்ளூயன்சரான ‘Guava Beauty’. இவர் மே 24ம் தேதி உயிரிழந்ததாக  அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டிருந்தனர்.  “முகத்தில் பூசும் பொருட்களை சாப்பிடும் முக்பாங்” வகை வீடியோக்கள் மூலம் அவர் புகழ் பெற்றிருந்தார். லிப்ஸ்டிக், பிளஷ், ஃபேஸ்மாஸ்க் போன்ற காஸ்மெட்டிக் பொருட்களை உணவாக சாப்பிட்டு வந்தார். இவருடைய தனித்துவமான காணொளிகள் மூலம் அவருக்கு 12,000-க்கும் அதிகமான ஃபாலோயர்கள்  இருந்தனர்.
அவரது மரணம் குறித்து பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. ரசாயனப் பொருட்கள் நிறைந்த மேக் அப் பொருட்களை  தொடர்ந்து சாப்பிட்டது அவரது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஒருவர் சாப்பிட முடியாத பொருட்களை சாப்பிடும் இந்த வகையான  காணொளிகள், சிறுவர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு தவறான முன்மாதிரியை உருவாக்கும் என பலரும் அதைப் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.  


“எங்கள் அழகுப் பெண் Guava Beauty மே 24 அன்று தனது மேக்-அப் உலகத்தை விட்டு விட்டு ஒரு  புதிய உலகத்திற்கு சென்று விட்டார்,” என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மரண செய்தி தைவான் மற்றும் சீனாவில் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்க்பாங் வகை காணொளிகள் ஆசியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்த சம்பவம்  ரீல்ஸ் மோகத்தால் மேக்கப் பொருட்களை சாப்பிடுவது எவ்வளவு ஆபத்து என்பதை உணர்த்தியுள்ளது.
அதிக வருமானம் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும்  ஈர்ப்பு காரணமாக இளைஞர்கள் அதிக ஆபத்தான   முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. Guava Beautyயின் மரணம், சமூக வலைதளங்களில்  அதிக கவர்ச்சி அல்லது வித்தியாசமான காட்சிகளுக்காக உயிரை பணயம் வைத்ததை உறுதிப்படுத்தி உள்ளது. சமூக வலைதள புகழுக்காக இளைஞர்கள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.