சர்வதேச செஸ் ('கிளாசிக்') தொடர் நார்வேயில் நடக்கிறது. இறுதி சுற்று போட்டியில், கார்ல்சனை விட அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் கருவானாவை எதிர்த்து குகேஷ் விளையாடினார். சிறு சிறு தவறுகள் காரணமாக, குகேஷ் கருவானாவிடம் வீழ்ந்தார்.
கடந்த சுற்றில் சிறப்பாக விளையாடிய, குகேஷ் கடைசி சுற்றில் தோல்வி அடைந்தார். அதேநேரத்தில், 10வது சுற்றில் கார்ல்சன் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார். இதனால் கார்ல்சன் 7வது முறையாக பட்டம் வென்றுள்ளார். 10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்துள்ளார். கருவானா 15.5 புள்ளிகளுடனும் (2வது இடம்), குகேஷ் 14.5 புள்ளிகளுடனும் (3வது இடம்) உள்ளனர்.