சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒரு இளைஞர் சிகரெட் புகைக்க ஆபத்தான முறையை முயற்சிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு நிகழ்வில் உட்கார்ந்திருந்த அந்த இளைஞர், தனது ஜீன்ஸ் பேண்ட்டில் எரியக்கூடிய திரவம் ஊற்றி தீ வைத்துள்ளார். அந்த தீயை வைத்து தனது சிகரெட்டை கொளுத்துகிறார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை இளைஞரின் இச்செயல் அச்சத்தில் ஆழ்த்தியது.
ஆனால் சிகரெட் கொளுத்திய பிறகு, ஜீன்ஸில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சித்தும் பலனில்லை. உடனே அருகில் இருந்தவர்களும் உதவி செய்கின்றனர். வீடியோ முடியும் வரை தீ அணையவில்லை. இந்த வீடியோவில், பிறகு என்ன நடந்தது என்ற தகவலும் இல்லை. இந்த செயல் இளைஞரின் உயிருக்கே ஆபத்தாக இருந்திருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.