பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து குறித்து அவதூறு பரப்பும் வகையில், விளம்பரங்களை வெளியிட்டதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக டாபர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
டாபர் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், பதஞ்சலியின் விளம்பரங்கள் டாபரின் தயாரிப்பை அவதூறாக சித்தரித்ததாகவும், அவற்றில் 47 ஆயுர்வேத மருந்துகள் மட்டுமே இருப்பதாகவும் பதஞ்சலியின் தயாரிப்பில் 51 மருந்துகள் உள்ளதாக ஒப்பீடு செய்து மக்களை தவறாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கின் விசாரணை 2024 டிசம்பர் 24 ம் தேதி தொடங்கிய நிலையில் பின்னர் நீதிமன்றம் பதஞ்சலி ஆயுர்வேதத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. டாபர் நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் கோரியது. நோட்டீஸ் பெற்ற பிறகும், பதஞ்சலி ஆயுர்வேதா கடந்த சில வாரங்களில் 6,182 முறை விளம்பரங்களைக் காட்டியதாக டாபர் நிறுவனம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விளம்பரங்களில் தவறான தகவல்கள் கொடுக்கப்படுவதாக டாபர் நிறுவனம் கூறுகிறது. பதஞ்சலி தனது தயாரிப்பு 51க்கும் மேற்பட்ட மூலிகைகளால் ஆனது. அதில் 47 மூலிகைகள் மட்டுமே உள்ளன என்றும் கூறுகிறது. பதஞ்சலி இதன் மூலம் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதாக டாபர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
டாபரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனம் அத்தகைய விளம்பரங்களைக் காட்டுவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் எனக் கூறியது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 14 ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?