இனி சேவிங்க்ஸ் அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை என்கிற அறிவிப்பு பஞ்சாப் நேஷனல் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவலாக வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக, எந்தவொரு வங்கியின் சேமிப்புக் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை அவசியம். இந்த இருப்புத் தொகை பராமரிக்கப்படா விட்டால், வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அபராதம் விதிக்கப்படும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி இப்போது சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை குறித்த புதிய விதியை முடிவு செய்துள்ளது. அதன்படி PNB சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கப்படாவிட்டால், எந்த அபராதமும் விதிக்கப்படாது என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத காரணத்துக்காக வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் இப்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காததற்காக ரூ.10 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இனிமேல், இந்த அபராதம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வசூலிக்கப்படாது என அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் நோக்கிலும் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஜூலை 1 முதல் அமலுக்கு வந்ததாக வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?