வெள்ளிக்கிழமையில் இன்ப அதிர்ச்சி... சற்றே சரிந்த தங்கம் விலை ....!
Dinamaalai July 04, 2025 05:48 PM

 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.  கடந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து திங்கட்கிழமை சவரனுக்கு ரூ 120  குறைந்து ஒரு சவரன் ரூ 71,320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  


ஜூலை 1ம் தேதி மாத தொடக்க நாளான செவ்வாய்கிழமையில் சவரனுக்கு 840 ரூபாயும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு 360 ரூபாயும், நேற்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை  சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், ஜூலை 4ம் தேதி வெள்ளிக்கிழமை இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. 

இன்றைய விலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ9,050க்கும்,  சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ120க்கும் கிலோவுக்கு ரூ1000 குறைந்து பார் வெள்ளி ரூ 120000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.