டெல்லி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 27 வயதுடைய பெண் ஒருவர் வயிற்றுவலி மற்றும் மலக்கழிவில் சிக்கலால் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் எந்த காரணமும் தெரியாத நிலையில், மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையின் போது, பெண் இரு நாட்களுக்கு முன் தனிப்பட்ட உறுப்புகள் வழியாக moisturiser பாட்டிலை உள்ளே செலுத்தியதை ஒப்புக்கொண்டார். இது பாலியல் சார்ந்த ஆர்வத்தினால் ஏற்பட்ட செயலாக கூறப்பட்டுள்ளது.
முதலில் ஒரு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும், அந்த பாட்டிலை அகற்ற முடியவில்லை. பின்னர் எடுத்த X-ray-ல், அந்த பாட்டில் மேல்பக்க ரெக்டலில் சிக்கியிருப்பது தெரியவந்தது. நோயாளியின் உடல்நிலை மோசமடைந்ததால், இதனை அறுவை சிகிச்சைமுறையில் அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக அவசர பரிசோதனைக்காக டெல்லி நகரத்தில் உள்ள முன்னணி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு, டாக்டர் தருண் மித்தல் தலைமையிலான மருத்துவ குழு, sigmoidoscopy எனப்படும் குறைந்த தலையீடு அடங்கிய முறை மூலம் பாட்டிலை வெற்றிகரமாக அகற்றினர். இந்த முறையில் உடலில் வெட்டும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்பதால், நோயாளிக்கு வலி குறைவாகவும், பின்னணி பிரச்சனைகள் இல்லாமல் விரைவாக மீண்டும். அறுவை சிகிச்சையைத் தவிர்த்து இந்த மாதிரியான சிக்கல்களுக்கு எண்டோஸ்கோபி முறை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சிகிச்சையின் பின், பெண் ஒரே நாளில் நிலைமை மேம்பட்டதால் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார். மருத்துவர் ஆஹுஜா கூறுகையில், “அந்த பாட்டில் அகற்றப்படாமால் இருந்திருந்தால், குடல் பிளவு மற்றும் உயிரிழப்பு போன்ற அபாயங்கள் ஏற்பட்டிருக்கலாம். இத்தகைய அவசர நிலைகளை தாமதிக்காமல் சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம்,” என தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவத்துறையின் முன்னேற்றம் மற்றும் தைரியமான அணுகுமுறை இவ்வாறு ஒரு உயிரைக் காப்பாற்றியது.