கட்டாயப்படுத்திய காதலி…! “திருமணமான அன்று இரவே….” மாப்பிள்ளையின் செயலால் கதறும் குடும்பம்…. பகீர் பின்னணி…!!
SeithiSolai Tamil July 05, 2025 12:48 AM

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் பாபு(33) கடந்த 10 ஆண்டுகளாக இவர் கோலார் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அதே மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்க்கும் ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். அதன்பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஹரிஷ் பாபு தனது காதலியுடன் சரியாக பேசவில்லை.

இதனால் இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். ஹரிஷ் பாபு தான் புதிதாக வீடு கட்டுவதால் அந்த பணிகளை முடித்த பிறகு திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இருப்பினும் அந்த பெண் ஹரிஷ் பாபுவை கட்டாயப்படுத்தியதோடு அவரது வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரையும் சம்மதிக்க வைத்துள்ளார்.

இது கன்னட ஆடி மாதம் என கூறியும் இளம்பெண் கேட்கவில்லை. அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து ஹரிஷ் பாபுவுக்கு இளம்பெண்ணுக்கும் பதிவு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் ஹரிஷ் பாபு தனது தாயை சொந்த ஊரில் விட்டு விட்டு கோலாரு க்கு இரவு வந்துள்ளார்.

பின்னர் 11 மணிக்கு தான் வேலை பார்த்த அரசு மருத்துவமனைக்கு சென்று மது குடித்து காது, தொண்டை பிரிவில் உள்ள அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று ஹரிஷ் பாபுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் மன உளைச்சலில் ஹரிஷ் பாபு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஹரிஷ் பாபு தனது செல்போன் சிம் கார்டை உடைத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.