கியூட் யூஜி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!
Dinamaalai July 05, 2025 01:48 AM


இளநிலை படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (கியூட்-யுஜி) முடிவுகள் வெளியாகியுள்ளன.  பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான கியூட்-யுஜி தேர்வு தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்டது. இன்று பிற்பகலில் cuet.nta.nic.in என்ற இணையதள முகவரியில், தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


இந்த தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்தே, பொதுப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் மாணவர்கள் கலந்துகொள்ள முடியும். இது குறித்து தேசிய தேர்வு முகமை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில்  கியூட்-யூஜி நுழைவுத் தேர்வுக்கான விடைக் குறிப்புகள் ஜூலை 1ம் தேதி வெளியிடப்பட்டன. இந்நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.


இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவா்களை சோ்க்க பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வை (கியூட்) மத்திய அரசு 2022ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. அந்தவகையில், இளநிலை படிப்புகளுக்கான நடப்பு ஆண்டு கியூட்-யுஜி நுழைவுத் தோ்வு மே 13ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை நடத்தி முடித்துள்ளது .ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, அஸ்ஸாமி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.