குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியாவின் AI-171 விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் லண்டனுக்கு புறப்பட்ட சில நிமிடங்களில் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 241 பயணிகள் மற்றும் 29 மருத்துவ மாணவர்கள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியாவை நடத்தும் டாடா குழுமம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இழப்பீடு பெறுவதற்கான செயல்முறை மிகவும் கடுமையாக இருப்பதாகவும், “விண்ணப்பம் முழுமையாக இல்லையெனில் இழப்பீடு இல்லை” என மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இங்கிலாந்து குடும்பங்களின் வழக்கறிஞர் ” விபத்தில் உயிரிழந்த பிரிட்டனைச் சேர்ந்த பயணிகளின் குடும்பங்கள், ஏர் இந்தியா மற்றும் போயிங் நிறுவனங்களுக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர தயாராகி வருவதாக தெரிவித்துள்ளனர்.
“ஏர் இந்தியாவின் இழப்பீடு செயல்முறை மிகவும் சிக்கலானது மற்றும் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. விண்ணப்பங்களில் சிறு குறைபாடு இருந்தாலும் இழப்பீடு மறுக்கப்படுகிறது. இழப்பீடு தொகையை குறைக்க முயற்சிப்பதாகவும் தெரிகிறது,” என கீஸ்டோன் சட்ட நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் மீனாக்ஷி பரிக், பி.ஜே. மருத்துவக் கல்லூரி டீன் விமானம் மோதிய மருத்துவக் கல்லூரி விடுதியில் உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் இழப்பீடு கோருவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக குறிப்பிட்டார். “ஏர் இந்தியாவிடம் இருந்து இழப்பீடு பற்றி எந்த தெளிவான தகவலும் இல்லை. இழப்பீடு வழங்குவதற்கு முன், ஆவணங்கள் மற்றும் டி.என்.ஏ. சோதனைகள் போன்றவற்றில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன,” என கூறியுள்ளார்.
அஜய் வால்கி, உயிர் பிழைத்தவரின் உறவினர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி விஷ்வாஷ்குமார் ரமேஷின் உறவினர் அஜய் வால்கி, “ஏர் இந்தியாவின் தகவல் தொடர்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. என் உறவினர் உயிருடன் இருப்பதாக தொலைபேசியில் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது சகோதரர் அஜய் குமார் ரமேஷின் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இழப்பீடு பற்றி கேட்கும்போது, ஆவணங்களில் குறை உள்ளதாக கூறி மறுக்கப்படுகிறது,” என தெரிவித்துள்ளார்.
விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த நகந்தோயி ஷர்மாவின் குடும்பம், “எங்களுக்கு எந்தவித தகவலும் ஏர் இந்தியாவிடமிருந்து வரவில்லை. இழப்பீடு பற்றி கேட்கும்போது, விண்ணப்பம் முழுமையாக இல்லை என கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். எங்களுக்கு எப்படி ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும், எங்கள் மகளை இழந்து தவிக்கிறோம்,” என சோகத்துடன் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக இப்படி புகார்கள் எழுந்துள்ளது பேசுபொருளாக வெடித்துள்ளது. விரைவில் இதற்கு ஏர் இந்தியா தரப்பு விளக்கம் அளித்து இழப்புடு வழங்குவதற்கான வேலைகளை தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?