கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் சாலை விபத்தின் போது அதிவேகம், கவன குறைவு போன்ற காரணத்தினால் உயிரிழந்த நபர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த என்.எஸ்.ரவிஷா என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதியன்று தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில் கார் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் காரில் இருந்த ரவிஷாவின் தந்தை, சகோதரி மற்றும் குழந்தைகள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் காரை ஓட்டிய என்.எஸ்.ரவிஷா மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். பின்னர் அவருடைய குடும்பத்தினர் கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரினர். ரவிஷா வேகமாக காரை இயக்கியதாலும், கவனக்குறைவாளும் விபத்து நடந்தது என்று கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இதைத்தொடர்ந்து கவனக்குறைவு மற்றும் அதிவேகம் போன்று காரணத்தினால் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு சட்டபூர்வமாக வாரிசுதாரர் பெற முடியாது என்று உத்தரவிட்டது. மேலும் கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.