பதஞ்சலி நிறுவனம் 2006 ம் ஆண்டில் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஆயுர்வேத மருந்துகள், உணவு, சுகாதாரப் பொருட்கள் போன்றவற்றை தயாரிக்கிறது. அதன் தலைமையகம் உத்தரகாண்ட் மாநிலம் ஹரிட்வாரில் உள்ள நிலையில் இதன் தயாரிப்புகள் இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் பதஞ்சலி வெளியிடும் விளம்பரங்களால் சில சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு எதிராக டாபர் நிறுவனம் தற்போது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. அதன்படி உயர் நீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்திற்கு விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டது. அதன் பிறகும் பதஞ்சலி நிறுவனம் 6,182 விளம்பரங்களை டாபர் நிறுவனத்திற்கு எதிராக வெளியிட்டதாக கூறப்படுகிறது. த
ற்போது டாபர் நிறுவனம் பதஞ்சலி நிறுவனத்தின் மீது தொடர்ந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் டாபர் நிறுவனத்தின் லேகியத்தை அவதூறு படுத்தும் வகையில் விளம்பரம் வெளியிடக்கூடாது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.