“செல்ல பிராணி பூனையை கொடூரமாக அடித்த மாணவி”… எப்படித்தான் மனசு வந்துச்சோ… அந்த வீடியோவை பார்த்தாலே பதறுது..!!
SeithiSolai Tamil July 04, 2025 05:48 PM

பூனையை கொடூரமாக தாக்கிய சம்பவம் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் வசித்து வரும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவி, தங்கியிருந்த குடியிருப்பு வளாகத்தில் தனது செல்லப்பிராணியான பூனையை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், மாணவி பூனையை தரையில் பலமுறை வீசுகிறார், பின்னர் அதை மேலே தூக்கி வீசுகிறார், மீண்டும் வந்து பூனையை உதைக்கும், அறையும் சம்பவங்கள் தெளிவாக தெரிகின்றன.

இந்தக் கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, “சொசைட்டி ஃபார் அனிமல் சப்டி” என்ற அமைப்பை சேர்ந்த நிதேஷ் கரே புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் உடனடியாக மாணவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் பெயர் மற்றும் விபரங்கள் பாதுகாப்பு காரணமாக வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான பூனை, பாதிப்படைந்த நிலையில் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை விரைவில் ஒரு பாதுகாப்பான தற்காலிக குடிபெயர்ப்பு (foster home) வீட்டிற்கு மாற்ற உள்ளதாக நிதேஷ் கரே தெரிவித்தார். இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் மாணவியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் செல்லப்பிராணிகளின் மீதான வன்முறைக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை தேவை என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Nitesh Anil Khare (@nitesh_khare)

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.