பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் - தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!
Top Tamil News July 04, 2025 12:48 PM
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி எக்ஸ் சமூக வலைதளத்தில், “தொலைநோக்குப் பார்வையும் துடிப்புமிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாட்டில் பல்வேறு பிரச்னைகள் குறித்த அமைச்சரின் கருத்துக்கள் மற்றும் அனுபவத்தைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் டெல்லி சென்ற ஆளுநர் தற்போது மீண்டும் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இன்று அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்த ஆளுநர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரையும் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.