இங்கிலாந்தில் 2வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்துள்ளார் சுப்மன் கில். இந்தியா -இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜெய்ஸ்வால் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
இந்நிலையில் 2வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த ஜடேஜா - சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டிய இந்த கூட்டணி 414 ரன்களில் பிரிந்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 89 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில்லுடன் வாஷிங்டன் சுந்தர் கை கோர்த்து இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசித் தள்ளினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது முதல் இரட்டை சதம் இதுவாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்திய அணி 122 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 472 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 200 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?