காலையிலேயே சோகம்… பிரபல மூத்த நடிகை விஜயா பானு காலமானார்… பிரபலங்கள் இரங்கல்..!!
SeithiSolai Tamil June 08, 2025 01:48 PM

பிரபல நடிகையும் கிளாசிக்கல் டான்சருமான விஜயா பானு காலமானார். இவர் ஆந்திர மாநிலத்தின் ஆனந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு உட்பட நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 1977 ஆம் ஆண்டு வெளியான அவர்கள் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்தார்.

இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த துணி நடிகைக்கான நந்தி விருதினை பெற்றார். மேலும் இவருடைய மறைவுக்கு தற்போது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.