தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்துள்ள நிலையில் தற்போது தேர்தல் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் முக்கிய உறுப்பினர்களை இணைக்கும் பணிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் மாற்றுக் கட்சியிலிருந்து பலர் இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். அதன்படி விருப்ப ஓய்வு ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நிலையில் அவர் கொள்கை பரப்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் பிறகு அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ராஜலட்சுமி, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட்செல்வன், முன்னாள். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஸ்ரீதரன், நீதிபதி சுபாஷ் மற்றும் டாக்டர் மரியசெல்வன் ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.