1990-ல் தந்தை ரூ.1 லட்சத்துக்கு வாங்கிய JSW பங்குகள்; கண்டெடுத்த மகன் - தற்போதைய மதிப்பு தெரியுமா?
Vikatan June 10, 2025 01:48 AM

1990-களில் தனது தந்தை வெறும் ஒரு லட்சத்திற்கு வாங்கிய பழைய JSW ஸ்டீல் பங்குகள் தொடர்பான ஆவணம் ஒன்றை மகன் வெளியிட, அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதலீட்டாளர் சவுரவ் தத்தா என்பவர், ஒருவர் தனது தந்தையிடமிருந்து JSW ஸ்டீல் பங்குகளை பெற்றது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில் "ஒருவர், 1990களில் அவரின் தந்தை ₹1 லட்சத்திற்கு வாங்கிய JSW பங்குகளைக் கண்டுபிடித்தார். இன்று அது ₹80 கோடி மதிப்புடையது " என்று முதலீட்டாளர் சவுரவ் தத்தா X பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது 1990 இல் ஒரு லட்சத்திற்கு JSW ஸ்டீல் பங்குகள் வாங்கப்பட்டிருக்கிறது. இன்று அந்த பங்குகளின் மதிப்பு தோராயமாக 80 கோடி இருக்கும் என்று கூறியிருந்தார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பழைய பங்கு சான்றிதழை கண்டுபிடித்த போது அந்த பயனரின் வாழ்க்கையே மாறும் என்று அவர் நினைத்திருக்கமாட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

JSW ஸ்டீல் என்பது...

JSW ஸ்டீல் லிமிடெட் இந்தியாவில் முன்னணி எஃகு உற்பத்தியாளராக உள்ளது. JSW குழுமத்தின் ஒரு அங்கமான இது செயல்படுகிறது.

JSW ஸ்டீல் லிமிடெட், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள ஆலைகளில் எஃகு தயாரிப்பு செய்கிறது. தற்போதைய நிலவரப்படி, நிறுவனத்தின் பங்கு விலை சுமார் ரூ.1004.90 ஆக உள்ளது. சந்தை மூலதனம் ரூ.2.37 டிரில்லியன் ஆகும். JSW ஸ்டீலின் பங்குகள் பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியுள்ளன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.