பிரபல நடிகரான ரவி மோகன் நடிப்பில் ஜெனி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அதன் பிறகு கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் பராசக்தி ஆகிய திரைப்படங்களில் ரவி மோகன் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக ரவி மோகன் நடிப்பில் ரிலீசாகும் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் ரவி மோகன் மனைவியை பிரிந்து பாடகி கெனிஷாவுடன் பொதுவெளியில் வருவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரவி மோகன் தனது சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தான் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு BRO CODE என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இயக்குனர் கார்த்திக் கூறியுள்ளார்.