அடுத்த இன்னிங்க்சில் நடிகர் ரவிமோகன்... பான் இந்தியா திரைப்படம் நடித்து தயாரிப்பு!
Dinamaalai June 09, 2025 08:48 PM

 


 ஜெயம் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் ரவி மோகன். இவர் சமீபகாலமாக மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.  

சர்ச்சையான கருத்துக்கள் உலா வரும் இந்நிலையிலும் ரவி மோகன் ஜீனி, கராத்தே பாபு, பராசக்தி ஆகிய படங்களில் நடித்தும் வருகிறார். இதில், ஜீனி மற்றும் கராத்தே பாபு படங்கள் இந்தாண்டே வெளியாகும் என படக்குழு தெரிவித்துவுள்ளன. அடுத்ததாக, பிரபல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

தற்போது, ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். இந்நிலையில், இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக நடிகர் ரவி மோகன் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிக்கிறாராம்.

இப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும் அனிமல் படத்திற்கு இசையமைத்த ஹர்ஷவர்த்தன் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா உட்பட 4 கதாநாயகர்கள் நடிக்கவுள்ளனராம். படத்திற்கு, 'ப்ரோகோட்' (brocode) எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.