Breaking: ஆதார் அப்டேட்.. “இன்னும் ஒரு வருஷம் டைம் இருக்கு”… இன்று காலக்கெடு முடிவடைந்த நிலையில் ஆதார் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!!
SeithiSolai Tamil June 15, 2025 12:48 AM

ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில் தற்போது ஆதார் அட்டையை அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை அடுத்த வருடம் வரை நீடித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக UIDAI தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஆதார் அட்டையை அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை ஜூன் 14 2026 வரை நீடிப்பதாக அறிவித்துள்ளது. எனவே ஆதார் அதிகாரப்பூர்வ இணையதளமான https://myadhaar.uidai.in முகவரியில் அப்டேட் செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த இணையதளத்தில் கட்டணம் இன்றி ஆதார் அட்டையை அப்டேட் செய்து பயனர்கள் பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.