தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து நடித்த பிரியங்கா சோப்ரா முன்னணி ஹீரோயின் ஆக உயர்ந்த நிலையில் தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கும் நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் மாமா ராமன் ராய் ஹண்டா நேற்று இரவு உடல் நலக்குறைவினால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு வயது 72. இவர் பிரபல நடிகை மன்னரா சோப்ராவின் தந்தை ஆவார். மேலும் இவரது மறைவுக்கு தற்போது திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.