நெகிழ்ச்சி சம்பவம்..! விமான விபத்தில் பலியான 270 பேரின் நினைவாக மரக்கன்றுகள்.!.
Top Tamil News June 17, 2025 01:48 PM
அகமதாபாத் விமான விபத்தில் உயிர் நீத்த 270 பேரின் நினைவாக, மதுரை மண்ணில் அதே எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடப்பட்டு ஒரு நெகிழ்ச்சியான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 29 பேர் என மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 5 மருத்துவ மாணவர்களும் அடங்குவர்.

ஒரு லட்சத்துக்கும் மேல் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபட்டு வரும் பொறியாளர் சோழன் குபேந்திரன் தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு நடந்தது. 

"உயிரிழந்தவர்களின் நினைவுகள் இந்த மரங்கள் மூலம் வாழும்; அவை மற்றவர்களுக்கு ஆக்ஸிஜனையும் வாழ்வையும் தரும்" என அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்களும் இந்த உன்னத பணியில் இணைந்து, ஒவ்வொரு மரக்கன்றையும் நட்டு தங்கள் மரியாதையை செலுத்தினர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.