சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சம் தொட்டது. இதனால் முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். நடுத்தர வர்க்கத்தினர் இனி தங்கம் வாங்கவே முடியாதோ என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அந்த வகையில், தங்கம் விலை நேற்று ஜுன் 16ம் தேதி கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,305-க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது.
இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ105குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9,200க்கும், சவரனுக்கு ரூ.840 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.73,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ120க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.