தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.74,440க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,305க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில், இன்று (ஜூன் 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,600க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.105 சரிந்து, ஒரு கிராம் ரூ.9,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து, நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.