"உப்பு கப்புராம்பு" ஒரு சமூகப் பிரச்சினையை விளக்குகிறது. எலனார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் பதாகையின் கீழ் ராதிகா லாவ் இந்த படத்தை தயாரிக்கிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் கடைசியாக பாலிவுட்டில் வருண் தவானுடன் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து இருந்தார் மேலும் தமிழில் ரகு தாத்தா திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் சுகாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் வாரம் வெளியாக இருந்த நிலையில் படக்குழு கடைசி நிமிடத்தில் நேரடி ஓடிடி வெளியீடாக மாற்றிவிட்டனர்.
இப்படம் 90 களில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது.
இந்த படம் ஜூலை 4 ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.