"ஊரு ஃபுல்லா மீன் குழம்பு வாசம்தான்"... 1200 குடும்பத்திற்கும் இலவசமாக மீன் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்
Top Tamil News June 17, 2025 10:48 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம் நெடுமானூர் கிராமத்தில் உள்ள 1200 குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டரை கிலோ மீன் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் ஊராட்சியின் சார்பில் மீன் விடப்பட்டு வளர்த்த நிலையில், இன்று மீன்கள் பிடித்து அந்த கிராமத்தில் உள்ள 1200 குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டரை கிலோ மீன் தனித்தனியாக கவரில் போட்டு, சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்று வீடு வீடாக  சென்று ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியம் நாகராஜ் வழங்கினார்.

இதனை பொதுமக்கள் உற்சாகத்துடன் வாங்கிச் சென்றனர். ஒரே நாளில் கிராமம் முழுவதும் உள்ள அனைத்து வீடுகளில் மீன் குழம்பு வைத்து சமைத்து உண்டு  மகிழ்ந்தனர். இரண்டாவது ஆண்டாக இலவசமாக வீடு வீடாக மீன் வழங்கிய சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் கிராம காரியக்காரர்கள் என பலர் உடன் இருந்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.