இது தெரிஞ்சா நீங்கள் செவ்வாழைப்பழத் தோலை தூக்கி போட மாட்டீர்கள்..!
Newstm Tamil June 18, 2025 11:48 AM

தினமும் ஒரு செவ்வாழைப்பழம் என்று இரண்டு வாரங்களுக்கு தொடர்ச்சியாக செவ்வாழைப்பழம் எடுத்துகொள்ளும்போது, நம்முடைய குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு பல மடங்கு அதிகரிப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

 செவ்வாழை ஒரு பழத்தில் சுமார் 3 கிராம் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதனால் செவ்வாழை பழம் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இது இந்த ஊட்டச்சத்துக்கான RDIயில் 10 சதவீதம் ஆகும். செவ்வாழையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை இந்த பழம் தடுக்க உதவுகிறது.

செவ்வாழையை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் அதைக் கட்டுப்படுத்த வேலை செய்கிறது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் இது இரத்த அழுத்தத்தை பராமரிப்பதிலும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

நன்மைகள் என்ன?

தினமும் செவ்வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு சரும பிரச்சினைகள் வருவதில்லை என்று சொல்லப்படுகிறது. இதில் நார்சத்து மட்டுமல்லாமல் தண்ணீர் சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அதிகமாக உள்ளன.

இதனால் சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கி முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. அதேபோல், பிரிட்ஜில் வைத்த செவ்வாழைப்பழத்தின் தோலை முகத்தில் மசாஜ் செய்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.

முகப்பரு மற்றும் சிறுசிறு கட்டிகள் இருந்தால் பழத்தின் தோலை அரைத்து சருமத்தில் தொடர்ந்து பூசி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

செவ்வாழைப்பழத் தோல் ஸ்கிரப் செய்வது எப்படி?

முகம் பொலிவு பெற செவ்வாழைப்பழத்தை அரைத்து அதோடு காய்ச்சிய பால், முல்தானி மட்டி, கடலைமாவு ஆகியவற்றை பேஸ்ட்டாக கலந்து முகம் மற்றும் கழுத்து, கை, கால் பகுதிகளில் தடவி, ஐந்து நிமிடங்கள் கழித்து விரல்களால் மசாஜ் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

இதன் மூலம் சருமத்தில் உள்ள நுண்ணுயிர்கள், தூசு, கரும்புள்ளிகள் வெளியேறி இறந்த செல்களை நீக்கும். வறண்ட சருமம் உடையவர்களுக்கும் இந்த முறை நல்ல பயனளிக்கும்.

கண் பிரச்னைகளுக்கு தீர்வு

செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ சத்து மிகுந்ததால் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது உதவுகிறது.

தினமும் 100 கிராம் சாப்பிட்டு வந்தால் கண் தொடர்பான பிரச்னைகள் வராமல் பாதுகாக்கலாம். கண் பார்வை மங்குவதை முன்னரே உணர்ந்தால் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வரலாம்.

பழத்தை போலவே இதன் தோலும் கண்களை பாதுகாக்க உதவி செய்கிறது. இதன் தோலை கண்களின் மேல் வைப்பதால் சூட்டைக் குறைத்து, நீர் வடிதலை கட்டுப்படுத்தி, கண்களுக்கு குளிர்ச்சி தரும்.

ஆகவே, செவ்வாழைப்பழம் மற்றும் அதன் தோல் சரும பராமரிப்பு மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு இயற்கை மருந்தாக பயன்படுகிறது. மேற்கண்ட குறிப்பை பின்பற்றி வருவதால் சருமம் பொலிவு பெறுவதுடன், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

செவ்வாழைப்பழம் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்:- 1. சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கும்:

 

Benefits of red banana in Tamil: சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் மற்றும் சிறுநீரக கல் வராமல் தடுக்க ஆசைப்படுபவர்கள் தினமும் செவ்வாழைப் பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. மேலும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

2. கண் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்:

Health benefits of red banana: மாலைக்கண் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் கண் பார்வை தெளிவடையும். டயாபெட்டிக் ரெட்டினோபதியல் பார்வை நரம்புகள் சேதம் அடைந்து கண்களில் மாகுலர் சிதைவு, பார்வை திறன் குறைதல், ரத்தம் கசிதல் போன்றவை ஏற்படுகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் அனைவரும் செல்போனையும் கணினியையும் சார்ந்தே வாழ்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து உபயோகிப்பதால் கண் சிவத்தல், கண்ணில் நீர் வடிதல், கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. எனவே, நியூட்டின், ஸியான்தினின், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ ஆகிய சத்துக்களை கொண்ட செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

3. மலச்சிக்கலை சரி செய்கிறது:

Health benefits of red banana in tamil: சில நேரங்களில் நீங்கள் ஒரு நாள் சாப்பிடும் உணவு அடுத்த நாள் மலம் கழிப்பதை கடினமாக்கும். அன்றாடம் மலம் கழிக்கும் பொழுது இந்தப் பிரச்சனையை சந்திக்கும்பொழுது நாளடைவில் இது மூல நோயை ஏற்படுத்தும். எனவே காலையில் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் மலம் கழிப்பதை சீராக்கும். இதனால் நமது மலக்குடலின் இயக்கம் சீராகி மூலம் போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

4. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது:

Benefits of eating red banana in tamil: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் ஆற்றல் மிகவும் முக்கியமானது. மேலும் செவ்வாழை பழத்தை சாப்பிடுவது அவர்களின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவும். அதில் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் உள்ளன. எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் செவ்வாழை பழத்தை சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

5. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது:

 

Red banana benefits tamil: செவ்வாழையில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இவை ரத்த நாளங்களை பெரிதாக்குவதற்கு உதவுகிறது. இதனால் நமது உடலில் ரத்த ஓட்டம் மேம்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கவும் உதவுகிறது. மேலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது.

6. இரத்தத்தை சுத்திகரிக்கிறது:

Sevvalai palam nanmaigal in tamil: செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் B6 ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் இது இரத்தத்தில் கலந்திருக்கும் கழிவுப்பொருட்களை சுத்திகரிக்கிறது.

7. நரம்புத் தளர்ச்சியை சரி செய்யும்:

Red banana medicinal benefits: நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டால் உடல் பலவீனமாகும் மற்றும் ஆண்மை குறைவு ஏற்படும். எனவே நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டவர்கள் தினசரி ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் நரம்புகள் பலமாகும். ஆண்மை தன்மை சீரடையும். மேலும் இது நமது நரம்பு மண்டலத்தை பாதுகாக்க உதவுகிறது.

8. தீய பழக்கத்தை கைவிட உதவுகிறது:

Health benefits of red banana in tamil: புகையிலை பொருட்களில் நிக்கோட்டின் எனும் பொருள் அடங்கியுள்ளது. நீங்கள் புகைபிடித்தல் பழக்கத்தை கைவிட நினைத்து அதனை நிறுத்த முடியவில்லை என்றால் தினமும் செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வரலாம். இவ்வாறு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வர நிகோடின் உட்கொள்ளும் அளவை குறைக்க முடியும்.

9. உடல் எடையை குறைக்க உதவுகிறது:

 

Red banana for weight loss: ஒரு நடுத்தர அளவிலான செவ்வாழைப் பழத்தில் மிகக் குறைந்த அளவே கலோரி அடங்கியுள்ளது. இருந்த போதிலும் இது அதிகப்படியான நார்ச்சத்தை கொண்டுள்ளது. செவ்வாழை பழத்தை சாப்பிட்ட பிறகு பசியின்மையை ஏற்படுத்தும். இதன் மூலம் நமது உடலில் அதிக கலோரி உட்கொள்ளப்படுவது தவிர்க்கப்படுகிறது. தினமும் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வர உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.

10. கருவுறுதலை மேம்படுத்த உதவுகிறது:

Benefits of red banana for pregnancy: செவ்வாழைப்பழங்கள் இனப்பெருக்க மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பெண்கள் தங்களது உணவில் செவ்வாழை பழத்தை சேர்த்துக் கொள்வதன் மூலம் இனப்பெருக்க ஹார்மோன்களை சமன் செய்து கருவறுதலை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இது அடங்கியுள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி ஆகியவை லிபிடோவை மேம்படுத்த உதவுகிறது.

11. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது:

Uses of red banana in tamil: தினமும் செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வர நம் உடலை தாக்கும் நோய்களிலிருந்து பாதுகாத்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
இதில் அடங்கியுள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் B6 ஆகியவை நோய் எதிர்ப்பு ஆன்டிபாடிக்கள் மற்றும் இரத்த வெள்ளை அணுக்களின் அளவை அதிகரித்து நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடும் ஆற்றலை நமது உடலுக்கு வழங்குகிறது.

12. தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது:

Sevvalai palam nanmaigal: செவ்வாழைப்பழத்தில் அடங்கியுள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை துண்டுகிறது. இந்த கொலாஜன் நம்முடைய தோல் சுருக்கம் அடைவதை தடுத்து இளமையாக நம்மை வைத்திருக்க உதவுகிறது. இவைகளை தவிர முடியை வலுப்படுத்த பயன்படுகிறது. முடி உதிர்தல், பொடுகு, உலர்ந்த முடி போன்ற தலைமுடி சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

செவ்வாழை பழத்தை சாப்பிட சரியான நேரம்:

செவ்வாழைப்பழத்தை சரியான நேரத்தில் சாப்பிட்டால் மட்டுமே இதில் அடங்கியுள்ள அனைத்து சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்கும். இதை சாப்பிட சரியான நேரம் காலை 6 மணி, காலை உணவிற்குப் பிறகு 11 மணி அல்லது மாலை 4 மணி ஆகும். குறிப்பாக காலையில் முதல் உணவாக ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடும் பொழுது அந்த நாள் முழுவதற்கும் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைத்துவிடும். பின்பு மீதமுள்ள சத்துக்களை நாம் உண்ணும் உணவில் இருந்து நமது உடல் எடுத்துக் கொள்ளும். உணவு சாப்பிட்ட உடனே செவ்வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது. ஏனெனில் மந்தமான உணர்வு ஏற்படும் மாற்றும் இதன் முழு சத்துக்களும் நமக்கு கிடைக்காது. இதேபோன்று பிற பழங்களை சாப்பிட்டு விட்டு செவ்வாழை பழத்தை சாப்பிடக்கூடாது. எப்பொழுதும் செவ்வாழைப்பழத்தை நன்றாக பழுத்தவுடன் சாப்பிடுவதை நல்லது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.