வேலைக்கு போற உங்க கணவருக்கு இந்த ப்ரோக்கலி உருளைக்கிழங்கு மசாலா செஞ்சு கொடுங்க...அசந்து போவாங்க....
Seithipunal Tamil June 19, 2025 10:48 AM

ப்ரோக்கலி உருளைக்கிழங்கு மசாலா
தேவையான பொருட்கள் :
பொருள்                                            - அளவு
உருளைக் கிழங்கு                            கால் கிலோ
ப்ரோக்கலி                                         100 கிராம்
பெரிய வெங்காயம்                             2
தக்காளி                                                 2
மஞ்சள் தூள்                             அரை டீஸ்பூன்
மிளகாய்த் தூள்                         1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா                             அரை டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி கீரை                    1 கைப்பிடி அளவு
உப்பு                                             தேவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய்                 -           தேவைக்கேற்ப
கடுகு                             -        அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு          -         அரை டீஸ்பூன் 
கறிவேப்பிலை           -           1 கொத்து 


செய்முறை :
முதலில், உருளைக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிவிட்டு அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும், அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து வேக வைக்கவும். உருளைக்கிழங்கு பாதி வெந்ததும் மசாலா தூள்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். அதன் பின்னர் அதனுடன் நறுக்கிய ப்ரோக்கலி பூக்களை சேர்த்து 10 நிமிடங்கள் வேகவைத்து, கொத்தமல்லி கீரையை தூவி இறக்கவும். சுவையான ப்ரோக்கலி உருளைக்கிழங்கு மசாலா தயார். இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சப்பாத்தி, சாம்பார் மற்றும் சாத வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.